உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமை முழு முடக்கம் அமல்..!
கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் நாளை மறுநாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொரொனா கண்டறியப்பட்டு இருக்கும் நிலையில் அவர் வீட்டிலிருந்து பணிகளை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உத்தரபிரதேசம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சுகாதாரப்பணிகள் தவிர அனைத்து பணிகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்திருக்கும் ஆதித்யநாத் முகக்கவசம் அணியாதவர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறினார். அதே நபர் மீண்டும் முக கவசம் அணியாதது தெரியவந்தால் 10 மடங்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.






