14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர்..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமியை மிரட்டி அக்கா கணவர் உட்பட 12 பேர் தொடர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 பேரில் 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கூலித் தொழிலாளியின் மகளான 14 வயது சிறுமி ஆறாவது வரை படித்துள்ளார்.
பின்னர் இந்த சிறுமி தனது அக்கா வீட்டில் தங்கி இருந்துள்ளார். அக்காவுக்கு தெரியாமல் அவரது கணவர் சென்றால் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த தகவல் தெரிந்து அவரது நண்பர்களாக குமார், வடிவேலு சுந்தரம் ஆகியோர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர்.
வீட்டு வேலைக்கு சென்று அந்த சிறுமி வீட்டின் உரிமையாளர் பன்னீர் மூர்த்தி, கண்ணன், அபி, கோகுல், நாய் சேகர், சங்கர், சரவணன் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் இவர்களின் மிரட்டலை மீறி இந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித் ப்ரியாவிடம் புகார் தெரிவித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நிகழ்வில் தொடர்புடைய 12 பேரில் 11 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவான ஒருவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.






