ஆக்சிஜன் கிடைக்காததால் 11 நோயாளிகள் உயிரிழப்பு..!
மும்பைக்கு அருகே உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காததால் இறந்த நோயாளிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மும்பை அருகே பால்கர் மாவட்டத்தில் பார்சி விரார் மாநகராட்சியில் வினாயக், ரித்தி வினாயக் என இரண்டு தனியார் மருத்துவமனைகள் உள்ளன.
அந்த மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளில் வைக்கப்பட்டிருந்த கொரொனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காததால் ஏழு பேர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.






