முதலமைச்சர் மம்தா பானர்ஜி 24 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை..!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 24 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக மம்தா பானர்ஜி இன்று தர்ணா போராட்டம் நடத்த உள்ளார்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இஸ்லாமிய வாக்குகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தனது பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தார்.இந்தநிலையில் மம்தா பானர்ஜி அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






