முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம்..!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதையடுத்து மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் விசாரிக்க கூடாது என்றும் பாஜக தலைவர்கள் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நீதிபதி குறித்து அவதூறான குற்றச்சாட்டு கூறியதற்காக மம்தா பானர்ஜி 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விலகுவதாகவும் அறிவித்தார்.


முதலமைச்சர் மம்தா பானர்ஜி 24 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை..!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 24 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக மம்தா பானர்ஜி இன்று தர்ணா போராட்டம் நடத்த உள்ளார்.

 

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இஸ்லாமிய வாக்குகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

தனது பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தார்.இந்தநிலையில் மம்தா பானர்ஜி அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.