நிலக்கரி சுரங்கத்தில் திடீரென புகுந்த வெள்ளத்தால் சிக்கி கொண்ட 21 பணியாளர்கள்..!
சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென புகுந்த வெள்ளத்தால் 21 பணியாளர்கள் அங்கு சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் பெங்குவான் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை 6 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத விதமாக அந்த சுரங்கத்தில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் சுரங்கத்தின் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 29 பணியாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழு கடும் போராட்டத்திற்குப் பிறகு 8 பேரை மீட்டனர்.
தற்போது மீதமுள்ள 21 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை பணியாளர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மிகவும் ஆபத்தானவை என குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. அங்கு அடிக்கடி வெடிவிபத்து வாய்ப்புகளும் ஏற்படுவதால் தொழிலாளர்களுக்கு அது மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று பல நாடுகளும் புகார் தெரிவித்து வருகின்றன.






