முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..! ஊரடங்கு அறிவிப்பா..?
நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக கொரொனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து பொது இடங்களில் கொரொனா பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தும் படி அப்போது மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில் நோய் தொற்று பரவல் அதிகம் உள்ள 12 மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி இன்று கொரொனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு பல்வேறு முக்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப் படுத்தப் படலாம் என்று கூறப்படுகிறது.
மீண்டும் ஊரடங்கு வரலாம் என்ற அச்சத்தால் புனே போன்ற நகரங்களில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் திரண்டிருக்கிறார்கள். டெல்லி, பஞ்சாப் ,குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் டெல்லி, சண்டிகர், அகமதாபாத், மும்பை, புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு நேரம் ஊரடங்கால் முடங்கிவிட்டது.
கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், யாவும் இரவு 8 மணியளவில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இரவில் நடமாடும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்கின்றனர். பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெறும் பெருவிழாக்கள், பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீரடி சாய்பாபா கோவிலில் மும்பை சித்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் மூடப்பட்டுள்ளன.






