கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோசை செலுத்திக் கொண்ட பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோசை போட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரொனா தடுப்பூசி இரண்டை செலுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார்.
வைரசை எதிர்கொள்ளும் வழிகளில் தடுப்பூசி செலுத்தி கொள்வது ஒன்று என தெரிவித்துள்ள மோடி தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி பிரதமர் மோடிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசியை புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் நிவேதா செலுத்தினார்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது டோசை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நிஷா சர்மா செலுத்திய நிலையில் அவருக்கு உதவியாக செவிலியர் நிவேதா இருந்துள்ளார்.






