--- --:--:-- --

அரியர் தேர்வுகள் ரத்து என்ற தமிழக அரசு உத்தரவை ஏற்க இயலாது..!

11

ரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்று தெரிவித்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் கொரொனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்லூரி மாணவர்களின் தேர்தலை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் தமிழக அரசின் இந்த அரசாணைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் மற்றும் சட்டப்படிப்பு, மருத்துவப் படிப்பு, ஆசிரியர் படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதைத்தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

இதனிடையே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வுகள் குறித்த கேள்வி எழுந்தபோது பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின் அடிப்படையிலேயே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.

 

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல்கலைக்கழக மானியக்குழு தரப்பு வழக்கறிஞர் எளிய முறையில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டது. இதனை ஏற்று நீதிபதிகள் தேர்வு எழுத கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்று அரசு உத்தரவை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon