--- --:--:-- --

சிறுவனின் பைலட் ஆகும் ஆசைக்கு உதவிய ராகுல் காந்தி..!

12

சிறுவனின் பைலட் ஆகும் ஆசையை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உதவியுள்ளார். கேரள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது கண்ணூர் மாவட்டத்தின் கிழக்கன்ரூர் என்ற பகுதியில் டீக்கடையில் சிறுவன் ஒருவனை சந்தித்தார்.

 

சிறுவனிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது வாழ்க்கையில் உனக்கு லட்சியம் என்னவென்று கேட்டார். பைலட் ஆவதுதான் லட்சியம் என்று பதிலளித்தான் சிறுவன். இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பேசிய சிறுவன் ராகுல் காந்தியை வெகுவாக கவர்ந்தார்.

 

பின்னர் அடுத்த நாள் ராகுல்காந்தியிடமிருந்து சிறுவன் மற்றும் அவரின் தந்தைக்கு அழைப்பு வந்துள்ளது. என்னமோ ஏதோ என்று அழைப்பை ஏற்று சிறுவனும் அவனது தந்தையும் ராகுல் காந்தியை சந்திக்க சென்றனர். சிறுவனிடம் அன்புடன் பேசிய ராகுல் காந்தி கேரளா வர பயன்படுத்திய விமானத்தில் சிறுவனை அழைத்து சென்று அவரது ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon