--- --:--:-- --

வடக்கில் விறுவிறு… பல்லடத்திலும் பட்டையை கிளப்பும் வாக்குப்பதிவு! திருப்பூரில் சராசரி 5.85% வாக்குகள் பதிவு

collector

திருப்பூர் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 5.85% வாக்குகள் பதிவாகி உள்ளன; வடக்கு தொகுதியில் சுறுசுறுப்பாகவும், பல்லடத்தில் மந்தமாகவும் வாக்குப்பதிவு இருந்தது.

 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பல இடங்களில் காலை 7 மணிக்கு முன்பாகவே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். திருப்பூர் நகரப்பகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர். குறிப்பாக தெற்கு தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஆர்வமுடன் பலர் வந்து செல்வதை பார்க்க முடிந்தது.

 

காலை 9 மணி நிலவரப்படி திருப்பூர் மாவட்டத்தின் சராசரி வாக்குப்பதிவு 5.85 சதவீதம். இதில் அதிகபட்சமாக திருப்பூர் வடக்கில் 9%, திருப்பூர் தெற்கில் 8%, அவிநாசியில் 1.09%, தாராபுரத்தில் 6.7%, காங்கேயத்தில் 7.2%, மடத்துக்குளத்தில் 6.20%, உடுமலையில் 7.1% வாக்குகள் பதிவாகி இருந்தன. பல்லடம் ஜீரோ என்றளவில் கணக்கை தொடங்காமல் இருந்தது.

Leave a Reply

Right Menu Icon