--- --:--:-- --

120 சவரன் நகை, ரூ.30 லட்சம் நகை கொள்ளை! திருப்பூரில் பரபரப்பு!!

Tpr house

திருப்பூரில், பிரிண்டிங் நிறுவன உரிமையாளர் வீட்டில் 120 சவரன் நகை, ரூ.30 லட்சம் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் மும்மூர்த்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ஹமீது என்பவரின் மகன் சபியுல்லா (வயது 54). இவருக்கு சொந்த ஊர் சேலர்; 19 வருடங்களாக தனது குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வருகிறார். அத்துடன், அதே பகுதியில் பிரிண்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2 ம் தேதியன்று சபியுல்லா தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

 

இந்நிலையில், அருகில் வசிக்கும் உறவினரான ஷியத்துல்லா என்பவர், சபியுல்லா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். வீட்டிற்கு வந்த சபியுல்லா வீட்டின் கதவு ஜன்னல் ஆகியவைக் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பதறினார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

 

பீரோவில் இருந்த 120 சவரன் தங்க நகையும், ரூ.30 லட்சம் ரொக்கமு திருடு போனது தெரிய வந்தது. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த்து, திருப்பூர் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அக்கம்பக்கம் குடியிருப்பவர்கள் மற்றும் பணிக்கு வந்து சென்று வந்தவர்களிடமும் விசாரணை நடைபெற்றது.

 

பூட்டிய வீட்டில் 120 சவரன் நகை, ரூ. 30 லட்சம் ரொக்கம் திருடு போன சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon