--- --:--:-- --

பிரியங்காவின் தமிழக பயணம் கடைசி நேரத்தில் ரத்து கொரோனா காரணமா?

priyanka 03

தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை தமிழகம் வருவதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் தமிழகத்திற்கு வருகை தந்து, வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களில் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்து சென்ற நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, நாளை தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

இதனிடையே, பிரியங்கா காந்தி கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் வந்ததால் அவர் தன்னை வீட்டிலேயே சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். எனினும், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோராவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பிரியங்கா காந்திக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று தெரிய வந்தது. எனினும், மருத்துவர்கள் அவரை வீட்டுத்தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

 

எனவே, தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்பதை பிரியங்கா ஒத்திவைத்துள்ளார். இன்று அசாமிலும், நாளை தமிழகத்திலும், நாளை மறுநாள் கேரளாவிலும் தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார். தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய தனிமையில் இருப்பதால் இந்த நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துள்ளார். பிரியங்கா காந்தி தனது பரப்புரையை ரத்து செய்துள்ளதால் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon