--- --:--:-- --

அமைச்சர் சிவி சண்முகம் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

12

பரப்புரையின் போது ஆர்த்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக அமைச்சர் சிவி சண்முகம் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் அதிமுக வேட்பாளரான அமைச்சர் சிவி சண்முகம் நேற்று முன்தினம் விழுப்புரம் ஜிஆர்டி வீதியில் வாக்கு சேகரித்தார்.

 

அப்போது அவரை வரவேற்று ஆர்த்தி எடுத்த பெண்களுக்கு அமைச்சர் பணம் வினியோகித்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்பதாலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தது குற்றம் என்பதாலும் விழுப்புரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அதன்பேரில் சிவி சண்முகம் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தேர்தல் வரவு செலவு கணக்கில் குழப்பம் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon