உலகின் முதல் நாடாக விலங்குகளுக்கான பெருந்தொற்று தடுப்பூசியை உருவாக்கியுள்ளது ரஷ்யா..!
உலகின் முதல் நாடாக விலங்குகளுக்கான பெருந்தொற்று தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா அசத்தியுள்ளது. கொரொனா தொற்று வைரஸ் மனிதர்களை மட்டுமின்றி நாய், பூனை மற்றும் குரங்குகள் போன்ற விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலங்குகளுக்கான உலகின் முதல் தடுப்பூசி உருவாக்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி ரஷ்யாவின் விலங்குகள் ஆரோக்கியத்திற்காக மத்திய ஆணையம் உருவாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய மருத்துவ பரிசோதனைகளில் நாய்கள் பூனைகள் போன்ற விலங்குகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.
சோதனை முடிவுகள் தற்போது தடுப்பூசி பாதிப்பில்லை என்பதை உறுதி செய்ததோடு அதிக நோய் எதிர்ப்பு திறனை அளிக்கிறது எனவும் அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.






