மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு உதவிய நடிகர் கமல்ஹாசன்..!
துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிக்கு செல்ல முடியாமல் தவித்த வீரர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் உதவி செய்துள்ளார். துபாயில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 8ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்தப் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடைசி நேரத்தில் வர வேண்டிய உதவி வராததால் செய்வதறியாது தவித்த அவர்கள் கோவையில் பிரச்சாரத்திற்காக வந்த கமல்ஹாசனை சந்தித்து உதவி கோரினார். உடனடியாக அவர்கள் அனைவரும் துபாய்க்கு செல்ல டிக்கெட் மற்றும் விசா மக்கள் நீதி மையம் சார்பாக வழங்கப்பட்டது.






