--- --:--:-- --

அதிமுக பெண் வேட்பாளருக்கு கொரொனா தொற்று உறுதி..!

3

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 30-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களையும் முதலமைச்சர் அறிமுகப்படுத்தி பரப்புரை செய்தார்.

 

இதில் இந்திரா காந்தி உள்ளிட்ட எட்டு வேட்பாளர்கள் ஒரே மேடையில் ஒன்றாக நின்றிருந்தனர். இந்த நிலையில் இந்திரா காந்திக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அவருடைய கணவர் தங்கமணிக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் மூலமாக இந்திரா காந்திக்கும் நோய்த்தொற்று பரவி இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon