ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி..!
தாதாசாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனக்கு மகிழ்ச்சியை தருவதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
திறமையான நடிப்பாலும் தனது உடல் மொழியிலும், வசன உச்சரிப்பிலும் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர் ரஜினிகாந்த். அதுமட்டுமில்லாமல் தமிழ் திரையுலகின் வியாபார தளத்தை ஏன் இந்தியத் திரையுலகின் வியாபாரத்தையும் உலக அளவில் உயர்த்தி மிக முக்கியமான பங்கு ரஜினிக்கு உள்ளது என கூறினார்.
எனவே ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது தன்னைப் போன்ற சக கலைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.






