டாஸ்மாக் மதுபானக்கடைகளை நான்கு நாட்கள் மூட வேண்டும்..!
சட்டசபை தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபானக்கடைகளை நான்கு நாட்கள் மூட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில் தமிழ்நாடு மதுபான விதிகளின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடை, விற்பனை கடை அனைத்தையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன்படி வருகிற நான்காம் தேதி முதல் 6ம் தேதி வரையும், மே மாதம் 2-ஆம் தேதியும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






