மேடையில் ஆடிக் கொண்டிருந்த போதே அயர்ந்து தூங்கிய சிறுமி..!
சீனாவில் சக தோழிகள் மேடையில் ஆடிக் கொண்டிருந்த போது அயர்ந்து தூங்கிய சிறுமியின் வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. சில பேருக்கு தூக்கம் வந்தால் அதை கட்டுப்படுத்தவே முடியாது. இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும் அங்கேயே சற்று கண்ணயர்ந்து விடுவார்கள்.
முக்கியமாக பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செல்பவர்கள் சாய்ந்தபடி தூங்கிக் கொண்டே தாங்கள் இருக்கும் இடத்தை கூட மறந்து விடுவார்கள். அதைப்போல மாணவர்கள் பலரும் வகுப்பறையில் தூங்கி விடுவது வழக்கம். ஆனால் சீனாவில் ஒரு சிறுமி வித்தியாசமாக தூங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
கிழக்கு சீனாவில் பென்சோ நகரில் பள்ளி சிறுமிகளுக்கான நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஐந்து வயதான சிறுமிகள் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தனர் .அப்போது மேடையின் நடுவே அமர்ந்திருந்த சிறுமி அயர்ந்து தூங்கிவிட்டார்.
அவள் அருகில் இருந்த அவளது தோழி ஆடிக்கொண்டே அவளை எழுப்ப முயன்ற போதும் அந்த சிறுமி உட்கார்ந்தபடியே கண்களை திறக்காமல் தூங்கிக் கொண்டே இருந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.






