நடை பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த மு க ஸ்டாலின்..!
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நடை பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
அந்த பகுதியில் இன்று காலை அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக், கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார், தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் உடனிருந்தனர்.
ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து அங்கு உள்ள உணவகத்திற்கு சென்று முகஸ்டாலின் தேனீர் அருந்தினார்.






