உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி என்று கூறிய ஓபிஎஸ்க்கு ஸ்டாலின் பதிலடி..!
உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி தான் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இளைஞர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
துணை முதலமைச்சர் போட்டியிடும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். தோற்றுப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை புத்திசாலித்தனமாக அவர் அறிவித்ததாக குறிப்பிட்டார்.
வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானது என பன்னீர்செல்வமும், நிரந்தரமானது என முதல்வர் பழனிசாமி மாறி மாறி கூறி நாடகம் ஆடுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி தான் என கூறிய பன்னீர்செல்வத்துக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.






