--- --:--:-- --

அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் 11 கோடி ரூபாய் சிக்கியுள்ளது..!

3

மைச்சர் எம்.சி.சம்பத்திற்கு சொந்தமான இடங்களில் மூன்று நாட்களாக நடந்த சோதனையில் 11 கோடி ரூபாய் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரின் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான தர்மபுரியில் உள்ள தனியார்பள்ளி மற்றும் நிதி நிறுவனத்தில் கடந்த 27ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

 

பின்னர் சென்னை தியாகராய நகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் அவருக்கு சொந்தமான நிதி நிறுவனங்களில் சோதனை விரிவடைந்தது. இந்த சோதனை 28ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் கணக்கில் வராத 11 கோடி ரூபாய் சிக்கி உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் கணக்கில் வராத வருமானம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக கூறும் அதிகாரிகள் இளங்கோவனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

இதேபோல் திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் வேலுவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என 18 இடங்களில் சோதனை நடந்தது. 2 நாட்கள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 3 கோடியே 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

 

மேலும் 25 கோடி ரூபாய்க்கு வருவாய் குறைத்துக் காட்டி இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். அதன் காரணமாக அவருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தப்படலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon