குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்பு தொடர்பான பிரச்சினை..!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்பு தொடர்பான பிரச்சினை காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குடியரசுத்தலைவர் மார்பு பிரச்சினை காரணமாக இன்று காலை மருத்துவமனைக்கு வந்ததாகவும் அவருக்கு வழக்கமான உடற்பயிற்சி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பில் இருப்பதாகவும் ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதற்கிடையில் குடியரசுத் தலைவரின் மகனிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உடல் நலம் விசாரித்துள்ளார். குடியரசுதலைவர் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக பிரதமர் தருவதாகவும் அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






