அமைச்சர் வேலுமணிக்கு ரூ.10 அபராதம் விதித்தது ஐகோர்ட்! காரணம் இதுதான்…
அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ. 10 அபராதம் விதித்ததுடன், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக அமைச்சர் வேலுமணி அறப்போர் இயக்கம் என்ற அமைப்பின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். தன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு சுமத்தி வருவதாகவும் டெண்டர் முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி தனக்கு எதிராக வீடியோ வெளியிட தடை கோரியும் இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. மேலும், தேர்தல் நேரத்தில் தனது நற்பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் அவதூறு வழக்கில் அமைச்சர் வேலுமணி குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அரசியல் உள்நோக்கத்துடன் அறப்போர் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் வேலுமணி வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகவும் கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு ரூபாய் 10 அபராதம் விதித்தனர்.
அதன்பின் அமைச்சர் வேலுமணியின் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த அபராதத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.





