--- --:--:-- --

கடலூர், தஞ்சை, சென்னையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம்

JP Natta

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்றும் நாளையும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

 

வரும் 6ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்படைந்து வருகிறது. தேசியத் தலைவர்கள் தமிழகம் வந்து தங்கள் கட்சிக்காக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

 

அவ்வகையில், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜனதா அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா இன்றும், நாளையும் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இன்று மதியம் கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடியில் உள்ள இடைச்செருவாய் என்ற இடத்தில், திட்டக்குடி தொகுதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

 

இதை தொடர்ந்து நாளை தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பூதலூரில், திருவையாறு தொகுதி பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசார பொதுக்கூட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் நட்டா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

 

நாளை மாலை 4 மணியளவில் சென்னை துறைமுகம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் செல்வத்தை ஆதரித்து சென்னை பூக்கடை பூக்கடை காவல் நிலையம் பகுதியில் நடைபெறும் பிரசார ஊர்வலத்தில் ஜே.பி. நட்டா கலந்து கொள்கிறார்.

 

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நாளை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கோவை தெற்கு, துறைமுகம், ஆயிரம்விளக்கு ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். வரும் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியிலும், திருப்பூர் மாவடாம் தாராபுரம் தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.

 

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவை தெற்கு, விருதுநகர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஊட்டி மற்றும் தளி தொகுதிகளிலும், வரும் 1-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியிலும் பிரசாரம் செய்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon