டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு ஏப்.4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு, தமிழக அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2-ம் தேதி அன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தற்போது அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் சுமுகமாகவும், எவ்வித பிரச்சனையின்றியும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி நள்ளிரவு வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நாளான மே 2-ஆம் தேதியன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




