பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி மீண்டும் புதுச்சேரி வருகை..!
சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி மீண்டும் புதுச்சேரி வருகிறார். தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளனர்.
இந்த மாநிலங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடியும் ஆதரவு திரட்டி வருகிறார். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் அதிமுக கட்சிகள் அடங்கிய கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக ஒன்பது தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அந்த மாநிலத்தில் ஏற்கனவே கடந்த 6ஆம் தேதி பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக 30ஆம் தேதியும் மோடி புதுச்சேரி மாநில பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 4 மணிக்கு புதுச்சேரி ஏறி மைதானத்தில் நடைபெற உள்ள பரப்புரைக் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து வேட்பாளர்களையும் மோடி அறிமுகப்படுத்தி உரையாற்ற உள்ளதாக கூறினார்.






