--- --:--:-- --

மக்கள் நீதி மையத்தின் பொருளாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை..!

7

திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் மூன்று வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

 

சோழபுரம் மதிமுக மாவட்ட துணை செயலாளரும் தொழிலதிபருமான நாகராஜ் மற்றும் திமுக நகர செயலாளர் தனசேகர் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

 

இதேபோல் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் அனைத்து ஹெல்த்கேர், அனிதா பனியன் கம்பெனி வணிக நிறுவனங்களின் தலைவரும் மக்கள் நீதி மையத்தின் பொருளாளருமான அனிதா சந்திரசேகரன் வீடு மற்றும் அலுவலகங்கள் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

 

இதில் முதற்கட்டமாக 8 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon