--- --:--:-- --

காரை பெண்களை மட்டுமே கொண்டு உருவாக்கி சாதனை..!

14

ம் ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது 50 ஆயிரமாவது ஹெக் டார் காரை பெண்களை மட்டுமே கொண்டு உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து அந்த நிறுவனம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் ஒரு காரை மட்டும் பெண்கள் மட்டுமே உருவாக்கி இருப்பதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் உழைப்பை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு காரை முழுமையும் உருவாக்கும் வாய்ப்பு அவர்களுக்கு தரப்பட்டதாக எம்ஜி மோட்டார் இந்தியா தலைவர் தெரிவித்தார்.

 

தற்போது எம்‌ஜி மோட்டார் நிறுவனத்தின் 33% பெண்கள் பணி புரிவதாகவும் எதிர்காலத்தில் இது 50 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon