--- --:--:-- --

கமல் கட்சியின் இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! தாராபுரத்தில் சார்லி போட்டி

Kamal MNM

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. தாராபுரம் (தனி) சார்லி போட்டியிடுகிறார்.

 

வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சி, 154 இடங்களில் போட்டியிடுகிறது.

 

இந்த 154 தொகுதிகளில், 70 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டது. அதை தொடர்ந்து, அக்கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. இதில் 40 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயர்கள் இடம் பெற்றது. அதுதவிர கன்னியாகுமரி நாடளுமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதிமய்யம் சார்பில் சுபா சார்லஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் 24 பேர் கொண்ட இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் விவரம் வருமாறு:

 

ஆயிரம் விளக்கு தொகுதி – கே.எம்.சரீப்,

ராயபுரம் தொகுதி – குணசேகரன்,

திருவாரூர் தொகுதி – கபில் அரசன்,

தொண்டாமுத்தூர் தொகுதி – ஷாஜஹான்,

உடுமலைப்பேட்டை – ஸ்ரீநிதி,

பவானிசாகர் – கார்த்திக் குமார்,

செய்யூர் – அன்பு தமிழ்சேகரன்,

வந்தவாசி – சுரேஷ்,

தாராபுரம் (தனி) – சார்லி,

கரூர் – மோகன்ராஜ்,

வானூர் – சந்தோஷ்குமார்,

பாபநாசம் – சாந்தா,

ஒரத்தநாடு – ரங்கசாமி,

மன்னார்குடி – அன்பானந்தம்,

மதுராந்தகம் (தனி) – தினேஷ்,

கீழ்பெண்ணாத்தூர் – சுகானந்தம்

சிவகாசி – முகுந்தன்,

பூவிருந்தவல்லி – ரேவதி நாகராஜன்,

திட்டக்குடி – பிரபாகரன்,

வேதாரண்யம் – முகமது அலி,

காட்டுமன்னார்கோவில் – தங்க விக்ரம்,

கரூர் – மோகன் ராஜ்,

வேப்பனஹள்ளி – ஜெயபால்,

கும்பகோணம் – கோபாலகிருஷ்ணன்,

திரு.வி.க. நகர் – ரம்யா

Leave a Reply

Right Menu Icon