--- --:--:-- --

வேட்பாளர்கள் தனபால், ஆனந்தன் சொத்து மதிப்பு எவ்வளவு?

danapala 01

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களான சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்டோரின் சொத்து மதிப்பி விவரங்கள் வெளியாகி உள்ளன.

 

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத்தொகுதிகளில் நேற்று, அதிமுக, திமுக உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், அவிநாசி (தனி) தொகுதியில் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், பல்லடம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் தெற்கு தொகுதியில் திருப்பூர் மாநகராட்சி முன்னாள் மேயரும், திமுகவை சேர்ந்தவருமான க.செல்வராஜ் உள்ளிட்டோர் நேற்று மனு தாக்கல் செய்தார்.

அவிநாசி தொகுதியில் போட்டியிடும் சபாநாயகர் தனபால், தன் பெயரிலும், மனைவி பெயரிலும், அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் என்ற வகைகளில், மொத்தம் 9.40 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். தனபால் தனது பெயரில் அசையும் சொத்து ரூ.30 லட்சம், அசையா சொத்து ரூ.4.5 லட்சம், மனைவி கலைச்செல்வி பெயரில் அசையும் சொத்து ரூ.1.54 கோடி, அசையா சொத்து ரூ.3.6 கோடி எனவும், குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை எனவும் குறி்ப்பிட்டுள்ளார்.

 

தனபால்,மனைவி பெயரில், சேலத்தில், ஒரு கோடியே 4 லட்சத்து 94 ஆயிரத்து 883 ரூபாய் மதிப்பில், முதலீடு உள்ளது.தனது பெயரில் நிலம், வாகனம் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ள தனபால், 1.60 லட்சம் ரூபாய் மதிப்பில், 40 கிராம் தங்கம், மனைவியிடம், 16 லட்சம் ரூபாய் மதிப்பில், 400 கிராம் தங்கம் இருப்பதாக, கூறியுள்ளார்.

பல்லடம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ஆனந்தனுக்கு, 8.79 கோடி ரூபாய்க்கு சொத்தும், 1.21 கோடி ரூபாய் கடனும் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல, மாநகராட்சி முன்னாள் மேயர் (திமுக) க.செல்வராஜ், தனக்கு அசையும் சொத்து ரூ.28 லட்சம் எனவும், 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon