தொண்டர்களுக்கு முட்டை தோசை ஊற்றி கொடுத்த அதிமுக வேட்பாளர்..!
திருவண்ணாமலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தொண்டர்களுக்கு முட்டை தோசை ஊற்றி கொடுத்ததால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வத்திற்கு இரண்டாவது முறையாக அதிமுக தலைமை வாய்ப்பை வழங்கியுள்ளது.
காஞ்சி பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பன்னீர்செல்வம் இரவில் அந்த பகுதியில் வந்த ஹோட்டலுக்குள் தொண்டர்களுடன் சென்றார். பன்னீர்செல்வம் தானே அடுப்பை மூட்டி தோசை ஊத்தி தொண்டர்களுக்கு கொடுத்துள்ளார். இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.






