--- --:--:-- --

அடையாற்றில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்ட காவல் ஆய்வாளர்..!

5

சென்னை அடையாற்றில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்ட காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிகிறது. சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் நேற்று இரவு ரோந்து பணியின்போது அடையாற்றில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்டதை கண்டறிந்துள்ளார்.

 

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததோடு தாமதிக்காமல் மரக்கட்டைகளை ஆற்றில் எட்டும் தொலைவுக்கு போட்டு அதன் மீது நடந்து சென்று அந்த பெண்ணை மீட்டுள்ளார்.

 

விசாரணையில் அந்த பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தன் நிலை தெரியாமல் நடந்து வந்த போது ஆற்றில் சிக்கி கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் பத்திரமாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon