--- --:--:-- --

சென்னை கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்

WhatsApp Image 2021-03-15 at 1.41.13 PM (1)

சென்னை கொளத்தூர் தொகுதியில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து, இன்று மாலையே திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் களம், சூடுபிடித்துள்ளது. நல்ல நாளான இன்று வேட்பாளர்கள் பலரும் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இம்முறை மீண்டும் கொளத்தூரில் போட்டியிடுகிறார். இதன் மூலம் 3வது முறையாக கொளத்தூரில் போட்டியிடும் மு.க. ஸ்டாலின், இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திமுகவினரின் ஆரவார வரவேற்புக்கு மத்தியில் அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள மாநகராட்சி பழைய மண்டல அலுவலகத்தில், கொளத்தூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை இணை இயக்குனர் எம்.தங்கவேலுவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு, ஸ்டாலின் கட்சித் தொண்டர்கள் திறந்த வேனில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். சாலையில் இரு புறமும் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

முன்னதாக, சென்னை கடற்பரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் ஆதிராஜாராம் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மனுதாக்கல் செய்துள்ள ஸ்டாலின், இன்று மாலையே திருவாரூர் செல்கிறார். கருணாநிதி பிறந்த மண்ணான  திருவாரூர் தெற்கு ரத வீதியில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தனது தேர்தல் பிரசார பயணத்தை ஸ்டாலின் தொடங்குகிறார்.

Leave a Reply

Right Menu Icon