--- --:--:-- --

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் மனுதாக்கல்

vanathi 02

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில், அக்கட்சி மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

 

ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக அணி, திமுக அணி, அமமுக – தேமுதிக கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி என்று பலமுனைப் போட்டி நிலவுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல், கடந்த 12ம் தேதி தொடங்கியது; வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும் 19ம் தேதி கடைசி நாளாகும்.

 

தமிழகத் தேர்தலில் நட்சத்திர அந்தஸ்தை கோவை தெற்கு பெற்றிருக்கிறது. காரணம், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அத்துடன், பாஜக சார்பில், அக்கட்சி மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் களமிறக்கப்பட்டுள்ளார்.

 

இதுதவிர, திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், அமமுக சார்பில் சேலஞ்சர் துரை, நாம் தமிழர் கட்சி சார்பில் – தமிழ்செல்வன் (எ) அப்துல்வகாப் போட்டியிடுகின்றனர்.

 

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, பாஜக- அதிமுகவினர் ஆரவாரமாக தெருக்களில் வாக்கு சேகரித்தாவறே வானதி சீனிவாசனை வேட்புமனு தாக்கல் செய்ய அழைத்து வந்தனர்.

Leave a Reply

Right Menu Icon