--- --:--:-- --

எல்இடி டிவிகளின் விலை உயரப் போகிறதா..?

12

ல்இடி டிவி தயாரிப்பில் முக்கிய உதிரிபாகமாக கருதப்படும் ஓபன் செல் பானல்களின் விலை உயர்ந்துள்ளதால் ஏப்ரல் முதல் டிவி விலையை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

 

சர்வதேச சந்தைகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஓப்பன் செல் பேனல்களை கொண்டு உள்நாட்டில் எல்இடி டிவி தயாரிக்கப்படும் விலையில் அவற்றின் விலை 35 சதவீதம் உயர்ந்துள்ளது.

 

இதன் காரணமாக ஏப்ரல் முதல் டிவி விலையை 5 முதல் 7 சதவீதம் உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக பானாசோனிக் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் மணி ஷர்மா தெரிவித்துள்ளார். தாம்சன் மற்றும் கோட்டக் டி‌விகளை தயாரித்து வரும் நிறுவனமும் ஏப்ரல் முதல் டிவி விலையில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon