--- --:--:-- --

முதல்வர் எடப்பாடி சேலத்தில் இன்று பிரசாரம்! 15ம் தேதி மனுதாக்கல்!

Edappadi 01

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். வரும் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அவர், வரும் 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

 

தமிழ்நாட்டில் வரும் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல், அன்றைய தினமே நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது; வரும் 19ம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனுத்தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி இருக்கிறது; மாலை 3 மணி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் ஆகும். எனவே, 2 நாட்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது.

 

அதன் பின்னர், 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி, சுபமுகூர்த்த நாளான வரும் 15ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

 

அன்றைய தினமே பெரும்பாலான அதிமுக வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது. எனினும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், போடி சட்டமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

 

இதற்கிடையே, முதல்வர் பழனிச்சாமி சேலம் மாவட்டத்தில் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார். ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழப்பாடியில் முதல்வர் பழனிசாமி இன்று மாலை வாக்கு சேகரிக்கிறார்.

 

தொடர்ந்து கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே அதிமுக வேட்பாளர் நல்லதம்பிக்கு வாக்களிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்கிறார். இதன் பிறகு ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்தும் முதல்வர் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon