--- --:--:-- --

இழுபறி முடிவுக்கு வந்தது… அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 6 தொகுதிகள்!

GK vasan 03

அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்ட நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு, தமாகாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதிமுக அணியில் பா.ம.க. வுக்கு 23, பா.ஜ.க. 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தே.மு.தி.க கடைசி நேரத்தில் விலகியது.

 

அதிமுக அணியில் த.மா.கா, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை அதிமுக நடத்தி வந்தநிலையில், குறைந்த தொகுதிகளை ஒதுக்க முன்வந்ததால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியது.

 

இதனை தொடர்ந்து த.மா.கா.வுடன் அ.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் 12 இடங்களை கேட்ட த.மா.கா.வுக்கு அ.தி.மு.க. 3 இடங்கள் ஒதுக்க முன்வந்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

இதனிடையே, 171 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டது. அதை தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் இன்னும் 14 தொகுதிகளே மீதம் இருக்கிறது. இந்த நிலையில், அதிமுக – தமாகா தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்றும் நடைபெற்றது. அதன் முடிவில், அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 6 இடங்கள் ஒதுக்குவது என்று முடிவானது.

 

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மற்றும் ஈரோடு கிழக்கு உள்பட 6 தொகுதிகள், தமாகாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக அணியில் 177 தொகுதிகள் அதிமுகவுக்கும், 23 தொகுதிகள் பாமகவிற்கும், 20 தொகுதிகள் பாஜகவிற்கும், பிற கட்சிகளுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது போக, 8 தொகுதிகள் எஞ்சியிருந்தன. தற்போது தமாகாவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள் மட்டும் எஞ்சியுள்ளன.

 

இதனிடையே, திமுக கூட்டணியில் இடம் பெற்ருள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, கடையநல்லூர் – முகமது அபு பக்கர், வாணியம்பாடி – முகமது நயீம், சிதம்பரம் – அப்துல் ரகுமான் போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon