கருங்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி தடுப்பு சுவர் மீது மோதி விபத்து..!
காஞ்சிபுரம் மாவட்டம் வடபழனியில் கருங்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வண்டலூர் ஒரகடம் சாலையில் விரிவாக்க பணி மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் தொடர் விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கருங்கல் ஏற்றி வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியில் சாலையின் நடுவில் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.






