--- --:--:-- --

அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி!

Ramados 02

தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட அதிருப்தி காரணமாக, புதுச்சேரியில் பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தனித்து போட்டியிடப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

 

புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக கட்சிகள், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. புதுச்சேரி சட்டசபையில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே ஏனாம் என நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 30 தொகுதிகளில், பேச்சுவார்த்தைக்கு பிறகு, என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

கூட்டணி கட்சியான பாஜக மற்றும் அதிமுகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சியான பாமகவுடன் பேச்சில் முன்னேற்றம் இல்லாமல் இருந்து வந்தது. அக்கட்சி 5 இடங்களை கேட்ட நிலையில், ஒரு இடத்தை ஒதுக்க முன்வந்ததாக தெரிகிறது. இதனிடையே, பாமகவுக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை என பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா அறிவித்ததை தொடர்ந்து தனித்து போட்டியிட போவதாக பாமக அறிவித்துள்ளது.

 

புதுச்சேரி பேரவை தேர்தலில் 30 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடுவதாக புதுச்சேரி மாநில பாமக துணைத் தலைவர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில், புதுச்சேரியில் பாமகவும் விலகி இருப்பது, பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon