--- --:--:-- --

அரசியலில் இருந்து விலகுகிறேன்: சசிகலா திடீர் அறிக்கை… அரசியல் களத்தில் பரபரப்பு!!

Sasikala

அரசியலை விட்டு முழுமையாக ஒதுங்குவதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா அறிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பாடுபடுவேன். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரின் எண்ணத்தை பிரதிபலிக்கும் சகோதரியாக இருந்தேன், ஜெயலலிதா மறைந்த பிறகும் அப்படியே இருப்பேன்.

ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மை தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும். நம் பொது எதிரி திமுக ஆட்சியில் அமர விடாமல் தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட வேண்டும். ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றியுடன் இருப்பேன். என் மீது அன்பும் அக்கரையும் காட்டியே ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

 

நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியின் எண்ணத்திற்கு இணங்க, அவர் கூறியபடி, இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில், புரட்சித் தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும்  நிலையில், திடீரென அரசியலுக்கு முழுக்கு போடுவதாக சசிகலா அறிவித்திருப்பது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon