14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிமங்கள்..!
அர்ஜென்டினாவில் 14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே மிகப் பழமையான டைனோசர் வகைகளில் ஒன்றான நெஞ்சாட்டி வகை டைனோசரின் முழுமையற்ற புதைபடிமத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரம்மாண்ட கால்கள், நீண்ட கழுத்துடன் வாழ்ந்த இந்த வகை டைனோசர்கள் செடிகொடிகளை உணவாக உண்ணக்கூடியவை. நெஞ்சாட்டி டைனோசர் 65 அடி உயரம் உடையது என கூறும் ஆய்வாளர்கள் கிடைத்திருக்கும் எலும்புகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.







