கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர்..!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி செவிலியர்களிடம் அவர்களது சொந்த ஊர் எது என விசாரித்துள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்த நிவேதா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகிறார். அவரும் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ரோசம்மாவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று தடுப்பூசி போட்டு விட்டுள்ளனர்.
அதன் பின் அவர்களுடன் பேசிய பிரதமர் தடுப்பூசி போடப்பட்டவிட்டதா என்றும் தனக்கு வலியே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செவிலியர் நிவேதிதா தடுப்பூசி போட்டுக்கொள்ள பிரதமர் வருப்பது தனக்கு இன்று காலையில்தான் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.






