பிகில் படத்தில் வில்லனாக நடித்த நடிகருக்கு காவல் துறையில் பதவி உயர்வு..!
பிகில் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விஜயனுக்கு கேரள காவல் துறையில் பதவி உயர்வு வழங்கியுள்ளது. முன்னாள் இந்திய கால்பந்து வீரரான இவர் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் கேரள காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இப்போது திரைப்படங்களில் நடித்து வரும் அவர் தமிழில் திமிரு, கொம்பன், பிகில் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் கேரள காவல்துறை தனக்கு உதவி கமாண்டன்ட் ஆக பதவி உயர்வு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.






