காய்கறிகளை வெட்ட உதவும் குரங்கின் வீடியோ வைரல்..!
குரங்கு ஒன்று பெண்ணுடன் அமர்ந்து பொறுப்பாக காய்கறிகளை வெட்ட உதவி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குரங்குகள் பொதுவாக குறும்புக்கார விலங்குகளாக கருதப்படுகின்றன.
குரங்கு கையில் பூமாலை கொடுப்பது போல என்ற பழமொழி அதனிடம் ஏதாவது கொடுத்தால் சிதறிச் சின்னாபின்னமாகி விடும் என்பதற்காகவே உருவானது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் இந்த வைரல் வீடியோ குரங்குகளை பற்றிய பொதுவான கருத்தை மாற்றும் வகையில் அமைந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் இந்த வீடியோவில் குரங்கு ஒன்று பெண்ணுடன் அமர்ந்து காய்கறிகளை வெட்ட உதவிசெய்து வருகிறது.
மறுபுறத்தில் இருக்கும் அந்த பெண்ணின் முகம் காட்டப்படாத நிலைமையில் எதிரில் அமர்ந்திருக்கும் குரங்கு காய்கறிகளை பாதியாக வெட்டி பாத்திரத்தில் போடுகிறது. இடைவிடாது பயிற்சி அளிக்கப்பட்டது போல பொறுப்பாக காய்கறி வெட்டும் இந்த குரங்கு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.






