--- --:--:-- --

சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பு..!

6

சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து செல்வதால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். அண்மையில் பெய்த மழையின் காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் பயிரிடப்பட்ட வெங்காயம் மழையால் அழுகியுள்ளன.

 

இதனால் கோயம்பேடு சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து மிக குறைவாக உள்ளது. இதை போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. தற்போதைய சூழலில் 5 லாரிகளில் மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

 

சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 170 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர் விலை ஏற்றத்தால் சாமானிய மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon