உத்தராகண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் போராட்டம் தொடர்கிறது..!
உத்தராகண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கி சிதைந்த சுரங்களுக்குள் உள்ளவர்களை மீட்கும் போராட்டம் பெரும் சவால்களுக்கு இடையில் தொடர்கிறது. உத்திராகண்ட் மாநில சமோலியில் பனிப்பாறைகள் உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கிராமங்களில் உள்ள வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது.
நீர் மின் நிலையங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் துணை ராணுவ படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.






