--- --:--:-- --

மேல்கூரை ஒன்று நொறுங்கி விழுந்த போது மயிரிழையில் உயிரிழந்த இளைஞர்..!

22

துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லில் வீசிய பலத்த சூறை காற்றால் மேல்கூரை ஒன்று நொறுங்கி விழுந்த போது இளைஞரொருவர் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் தப்பி பிழைத்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

அங்குள்ள மாவட்டத்தில் உள்ள சாலை ஒன்றில் இளைஞர் ஒருவர் நடந்து வருகிறார். அப்போது புழுதி காற்று வேகமாக வீச தொடங்குகிறது. அதை பார்த்தபோது பூக்கடையில் கொண்டு ஒதுங்கி நிற்கிறார் அந்த இளைஞர். பூக்கடையில் உரிமையாளர் வெளியே வந்து பூக்கூடையை உள்ள எடுத்து வைத்தபோது அந்த இளைஞரும் பூக்கடைக்குள் செல்கிறார்.

 

அவர் உள்ளே செல்வதற்காக காத்திருந்த மேல் கூரை நொறுங்கிக் கீழே விழுந்து சென்றது. சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்பதை தங்களின் அதிர்ஷ்டம் என்று கடையின் உரிமையாளர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை நிறுவனம் இஸ்தான்புல் நகரத்தில் திடீரென்று வீசிய புயலால் இதுவரை மூன்று பேர் இறந்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon