தன்னைத்தானே மண்ணில் புதைத்து கொண்டு சமாதியாக முயன்ற பெண்..!
உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் பில்லி சூனியம் மீது நம்பிக்கை வைத்து தன்னைத்தானே மண்ணில் புதைத்து கொண்டு சமாதியாக நினைத்த நிலையில் ஊர் மக்கள் திரண்டு அவரை மீட்டுள்ளனர். பின்னர் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சாமியார் ஒருவர் பேச்சை கேட்ட அந்த பெண் உயிரோடு சமாதி ஆக முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து மூடநம்பிக்கைகளை பரப்புகிறவர்கள் மீதும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






